சென்னை உயர் நீதிமன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஏனைய பல இடங்களிலும் வெடிகுண்டு வெடிக்குமென உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு மிரட்டல் கடிதமொன்று வந்துள்ளமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சி.குமரப்பனுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.
அந்த கடிதத்தை மேற்கு டெல்லி, மோதிநகர் சுதர்சன் பார்க் பகுதியைச் சேர்ந்த ஹர்தான் சிங் நாக்பால் என்பவர் எழுதியுள்ளார்.

அதில் “நான் சர்வதேச காலிஸ்தான் ஆதரவு குழுவைச் சேர்ந்தவன். நேரத்துக்கு தகுந்த மாதிரி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்து செல்வேன்.

தென் மாநிலத்தில் இருந்து மத்தியப் பிரதேசத்துக்கும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கும் பின் அங்கிருந்து டெல்லிக்கும் இடம் மாறிக் கொண்டேயிருப்பேன்.

அதேபோன்று எனது தொலைபேசி எண்ணையும் மாற்றிக் கொண்டே இருப்பேன்.
அந்தவகையில் நான், என்னுடைய மகனுடன் சேர்ந்து இந்த மாதம் 30 ஆம் திகதி, சென்னை உயர்நீதிமன்ற வளாகம் மற்றும் பல இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வேன்” என கூறப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தலைமைப் பதிவாளர் சி.குமரப்பன் உயர் நீதிமன்ற பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டுக்கமைய வழக்கு பதிவு செய்து, பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!