கண்டி மற்றும் மாத்தளை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சுயாதீன நீதிச்சேவை மூலமாக, 2000 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கிடைக்கப் பெறாத, கண்டி மற்றும் மாத்தளை பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆயிரத்து 888 மில்லியன் ரூபா நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.


அரசாங்கம் இந்த நிதியை பெற்றுக் கொடுப்பதற்கு துரித கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், சுயாதீன நீதிச் சேவைக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றிகரமான சிறப்பம்சமாகும் எனவும், மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைவர் பி.பி.சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில், பெருந்தோட்ட மக்களுடைய பிரச்சினை தொடர்பாக, தொழிலாளர் ஒத்துழைப்பு சங்கம், மனித அபிவிருத்தி சங்கம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு இணங்க, தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிதியை, சட்ட ரீதியாக வழங்குவதற்;கான முன்னேற்றகரமானதும் வரலாற்று முக்கியததுவம் வாய்ந்ததுமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளதாக, சட்டத்தரணி ஏ.செல்வராஜா தெரிவித்தார்.

தொழிலாளர் ஒத்துழைப்புச் சங்கம் மற்றும் மனித அபிவிருத்தி தாபனம் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு, கண்டி மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் அலுவலகத்தில், நேற்று முன்தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!