இராணுவத்தளபதி – கடற்படைத்தளபதி சந்திப்பு!

இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை சந்தித்துள்ளார்.


இச்சந்திப்பு, கொழும்பில் அமைந்துள்ள கடற்படை முகாமில் இடம்பெற்றது.

உள்நாட்டு மற்றும் சர்வதேசத்தின் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், கடந்த ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி, 57 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கொழும்பிலுள்ள கடற்படை முகாமுக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதிக்கு, கடற்படையின் அதிக பட்ச மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனையடுத்து, இரண்டு படைகளினதும் தளபதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற பின்னர், கடற்படைத் தளபதியை, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்தக் கலந்துரையாடலில், முப்படைகளின் பிரதானி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படையின் துறைசார் பணிப்பாளர்கள், மேற்கு கடற்படை செயற்பாடுகளுக்குப் பொறுப்பான கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!