மட்டு, மாநகர சபையில் கட்சி சார்ந்த செயற்பாடுகள் : சபை உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாநகர சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்ந்த செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுத்து வருவதாகவும், மாநகர சபை உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறி வருவதாகவும், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாநகர சபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஈபிடிபி உறுப்பினர் ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்தினர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தங்களை ஒட்டுக்குழு என விமர்சனம் செய்வதாகவும், ஆனால் அவர்கள் ஒட்டுக்குழுக்களுடன் இணைந்தே ஆட்சி செய்கின்றார்கள் என்பதை மறந்து போவதாகவும், ஈபிடிபி மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் எஸ்.சிவானந்தராஜா தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!