நிலக்கடலை அறுவடை விழா !

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலளர் பிரிவிலுள்ள பூலாக்காடு கிராமத்தில் இன்று நிலக்கடலை அறுவடை நிகழ்வு நடைபெற்றது.

பூலாக்காடு மண்முத்து விடிவெள்ளி மறு வயற் பயிர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் நி.மனோகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராசா, பிரதேச சபை உறுப்பினர் கே.பகிதரன், உலக தரிசன திட்டமிடல் உத்தியோகஸ்த்தர் என்.ரமேஸ், விவசாய போதனாசிரியர் கே.நிஷாந்தன். கிராமசேவை உத்தியோகஸ்த்தர் எஸ்.குரு ஆகியோர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பூலாக்காடு, பெண்டுகள்சேனை, பட்டியடிவெளி, பெரிய வேதம், கானாந்தனை போன்ற இடங்களில் சுமார் 150 ஏக்கரில் இம் மேட்டு நிலபயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: ருத்ரா

error: Content is protected !!