யாழ். தென்மராட்சியில், உணவகங்கள் திடீர் சோதனை!

பொது மக்களின் முறைப்பாட்டை அடிப்படையாக கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 14 உணவகங்களுக்கு, சாவகச்சேரி பொது சுகாதார பரிசோதகர்கள், இன்று திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர்.

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள உணவகங்களில், இந்த பரிசோதனையின் போது, சட்டத்திற்கமைவாக உணவகங்கள் இயங்குகின்றனவா என்பதுடன், உணவகங்களின் தரம் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன் போது, 11 உணவகங்கள் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்டதுடன், உணவுகள் தயாரிக்கும் பகுதிகள் மிகவும் சுத்தமற்று காணப்பட்டன.

இவற்றில் அதிகளவான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 4 உணவகங்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

2 உணவங்களில் காணப்பட்ட தகுதியற்ற உணவுகள் அழிக்கப்பட்டதுடன், ஏனைய உணவகங்களை, மிகவும் தகுதி வாய்ந்த உணவகங்களாக மாற்றியமைப்பதற்கான கால அவகாசம், சாவகச்சேரி பொது சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டது.

அத்துடன், அறிவுறுத்தல்களை பின்பற்ற தவறும் பட்சத்தில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொது சுகாதார அதிகாரிகளால் உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு நடவடிக்கையை, ஒரு உணவு மருந்து பரிசோதகருடன், 6 பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!