தேவரப்பெருமவின் செயலுக்கு இராதாகிருஷ்ணன் பாராட்டு!

களுத்துறையில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை, நீதிமன்ற உத்தரவை மீறி, காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாலித தெவரப்பெருமவின் செயற்பாடு, சட்ட ரீதியாக பிழை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அவரின் மனிதாபிமான செயற்பாட்டை வரவேற்கிறோம் என, விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா ஹட்டன் ஸ்டிரதன் தோட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்…

பெருந்தோட்ட தொழிலாளர்கள் இந்த நாட்டிற்காக பல வருடங்களாக உழைத்தாலும், அவர்கள் உயிரிழந்த பின்பு இறுதி கிரியைகளை செய்வதற்கு இடம் வழங்கப்படாமையானது மனிதாபிமானமற்ற செயலாகும்.இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.

அண்மையில் களுத்துறை மத்துகமவில் இடம்பெற்ற சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெரும எடுத்த முயற்சி சட்ட ரீதியாக பிழையாக இருந்தாலும் மனிதாபிமான ரீதியில் அதனை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

இன்று அவருக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளிலும் அகிம்சை வழிகளிலும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணம் தொழிலாளர்கள் தங்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு நடந்த செயலாகவே இதனை கருதுகின்றார்கள்.

தொழிலாளர்களின் உரிமை தொடர்பாக பல அமைப்புகள் குரல் கொடுத்து வந்தாலும் ஒரு சில தோட்ட நிர்வாகங்கள் அவற்றை கண்டுகொள்வதில்லை.

ஒரு மனிதன் வாழ்ந்து மறையும் போது அவனுக்கு கொடுக்க வேண்டிய இறுதி மரியாதையை கூட வழங்குவதற்கு இந்த தோட்ட கம்பனிகள் முன்வருவதில்லை.

இதற்கு முழுமையாக தங்களுடைய வருமானத்தை மாத்திரமே கருத்தில் கொண்டு செயல்படுகின்றார்கள்.

எனவே இது போல இன்னும் ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க தொழிலாளர்கள் சார்பாக அணைவரும் குரல் கொடுக்க முன்வர வேண்டும். எனவே பாலித தேவரப்பெருமனவின் செயற்பாடானது அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஒரு சிறந்த எடுத்து காட்டாகும் என தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!