பாலித்த தெவரப்பெருமவுக்கு பிணை

சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட 6 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த 6 பேரும், ஒரு இலட்சம் ரூபாய் கொண்ட இரண்டு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்துகம நீதவான் நீதிமன்றம் இன்று (16) அறிவித்துள்ளது.

நீதிமன்ற கட்டளையை மதிக்காமல் சடலம் ஒன்றை புதைத்தமை தொடர்பில் பாலித தேவரப்பெரும உள்ளிட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையிலேயே அவர்கள் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!