மலையகத்தில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்!

மலையகத்தில் தொடரும் மழையினால் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பொகவந்தலாவ கிலானி பொகவானை ஆகிய வீதிகள் நீரில் மூழ்கின.

மலையகத்தில் தொடரும் மழை காரணமாக பொகவந்தலாவ கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்துள்ளது.

இதனால், பொகவந்தலாவ கிலானி மற்றும் பொகவானை வழியாக பொகவந்தலாவ நரத்திற்கு செல்லும் இரண்டு பிரதான வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளனன.

குறித்த வீதிகளின் ஊடாக போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

தெரேசியா, கிலானி, சிங்காரவத்த, பொகவானை, டன்பார் ஆகிய தோட்டபகுதிகளில் இருந்து, பொகவந்தலாவ சென்.மேரீஸ் மத்திய கல்லூரி மற்றும் ஹோலி ரோஸ்சரி ஆகிய பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொகவந்தலாவ டின்சின் பகுதியில் உள்ள மரக்கறி பண்ணை வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!