வவுனியாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வவுனியாவின் இன்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக பொழிந்துவரும் நிலையில், அடை மழை மற்றும் எழுக தமிழ் நிகழ்வு காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அதிகாலை முதல் பொழிந்துவரும் மழை காரணமாக பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் முதல் வைத்தியசாலைக்குச் செல்லும் மக்கள்வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரச மற்றும் தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

பாடசாலைகள் மற்றும் அரச திணைக்களங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் வழமைபோல செயற்படுகின்றன.

எனினும் வவுனியா நகர்ப்பகுதியில் வழமையைவிட மக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!