கொக்கட்டிச்சோலை ஆலய இரதோற்சவம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் இரதோற்சம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

கல் நந்தி புல் உண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமான கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்குகின்றது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த 01ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து 15 தினங்கள் ஆலயத்தில் தினமும் தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா நடைபெற்றுவந்தது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து பார்வதி – சிவன், பிள்ளையார், வள்ளி தேவசேனாசமேத சுப்பிரமணியன் ஆகியோர் வெளிவீதி கொண்டுவரப்பட்டு அங்கு சித்திரத்தேரில் ஆரோகணிக்கப்பட்டதை தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்றன.

இரதோற்சவத்திற்காக தொன்றுதொட்டு நடைபெற்றுவரும் வழமையான நடைமுறைகளை தொடர்ந்து வடமிழுக்க இரதோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இரதோற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!