எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக கிளிநொச்சியில் கதவடைப்பு!

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கதவடைப்பு போராட்டத்தை முன்னெடுக்குமாறு, தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கிளிநொச்சியில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சியில், உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் பாடசாலைகள், அரச நிறுவனங்கள் இயங்கும் நிலையில், ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதுடன் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்தளவிலேயே உள்ளது.

இதேவேளை, தமிழ் மக்கள் பேரவையின் கிழக்குக் குழு, எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து, கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!