எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு:யாழில் கடையடைப்பு!

யாழ்ப்பாணத்தில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு கோரி வடக்கு, கிழக்கு முழுவதும் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் நகரம் மற்றும் சில பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறவில்லை.

இதனால் யாழ் நகரப்பகுதி மற்றும் பேருந்து நிலையம் என்பன வெறிச்சோடியுள்ளன.

வீதிகளில் மக்களின் நடமாட்டம் மிகக்குறைந்தளவிலேயே காணப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.

வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை இணைத் தலைவராக கொண்ட, தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி நடைபெறுகின்றது.

அரசியல் தீர்வு மற்றும் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரும்பும் தமிழ் மக்களின் வலிமையைக் காண்பிக்கும் வகையில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், வடக்குக் கிழக்கு எங்கும் தமிழர் பகுதிகளில் கடையடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!