இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதி!

கொழும்பில் நடைபெற்ற ‘உதாரய் ஒப’ இசை நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக ஜனாதிபதி பங்கேற்றார்.

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட ‘உதாரய் ஒப’ இசை நிகழ்ச்சி கொழும்பு தாமரை தடாகம் கலையரங்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

முன்னணி பாடகர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பாடகர்களும் இசைக்குழுவினரும் பின்னணி இசை வழங்கினர்.

முப்படையினர், பொலிசார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினகளுக்காக தொழில் பயிற்சி நிலையமொன்றை அமைப்பதற்காக நிதி சேகரிக்கும் நோக்குடன் இந்த இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாதுகாப்பு பணிக்குளாம் பிரதானி உள்ளிட்ட முப்படை தளபதிகள் உட்பட பாதுகாப்பு அதிகாரிகளும் அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!