யாழ்ப்பாணத்தில் தீக்காயங்களுக்கான பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தனக்குத் தானே தீ மூட்டிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

54 வயதுடைய பரமேசன் பாலாம்பிகை என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருமணமாகி வாழ்ந்து வந்த குறித்த பெண்ணுக்கு குழந்தைகள் இல்லை எனவும், கணவன் நேற்று மதியம் வெளியில் சென்றிருந்த நிலையில், குறித்த மூதாட்டி தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் அவரை மீட்ட அயலவர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!