பங்காளிக் கட்சிகளின் ஆதரவு சஜித்திற்கு:அஜித் பி.பெரேரா

பங்காளிக் கட்சிகளின் ஆதரவு சஜித்திற்கே என, பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் ஆதரவை பெற்றுவிட்டதாகவும், சஜித் பிரேமதாச வெகு விரைவில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் அணி உறுப்பினரும், பிரதி அமைச்சருமான அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அமைச்சர் சஜித்துக்கு சிறிய கட்சிகளின் ஆதரவு இல்லையென தெரிவிக்கப்பட்டு வந்த கருத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதாகவும், சிறிய கட்சிகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் இரவு சஜித் பிரேமதாசவுடன் இடம்பெற்ற கூட்டத்தில் சஜித்துக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!