ஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு:ஒருவர் பலி!

கொழும்பு ஹங்வெல்ல பழைய வீதியிலுள்ள அம்புல்கம சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வான் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்துக்கான காரணம் என்னவென்பது இதுவரை அறியப்படாதுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய சுரேஸ் சுவந்த என்பவர் உயிரிழந்துள்ள நிலையில், 26 வயதுடைய வஜிர குமார என்பவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!