நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் எஹலியகொட,அம்பகமுவ,புலத்சிங்கள,கிரிஹெல்ல,கலவான,வரகாபொல மற்றும் மத்துகம பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, சொரனாதொட பிரதேசத்தில் கல் சரிவு ஏற்பட்டுள்ளதால் 88 குடும்பங்கள் தற்காலிகமாக வௌியேற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் கிழக்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமாக பலத்த மழை பெய்யக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, கடந்த மணித்தியாலங்களில் களுத்துறை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களில் கடும் மழை பெய்துள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் நாட்டின் சில பகுதிகளில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ள அதேநேரம் கிளை வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!