அமைச்சர் அர்ஜீண ரணதுங்க பலாலி விமான நிலையத்திற்கு திடீர் வருகை.

சிவில் விமான மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜீண ரணதுங்க இன்று திடீர் விஜயமாக வருகை தந்து பலாலி விமான நிலைய புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார். எதிர்வரும் ஒக்டோபர் 15ம் திகதி பலாலி விமான நிலையம் திறந்து வைக்கப்படவுள்ள நிலையில் அதன் புனரமைப்பு பணிகளின் முன்னேற்றத்தினை அமைச்சர் பார்வையிட்டுள்ளார். வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிகள் 70 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் முதலாவது விமானம் இந்தியாவிற்கான பயணத்தினை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். கடந்த வாரமும் அமைச்சர் அர்ஜீண ரணதுங்க பலாலி விமான நிலையத்தினை அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டிருந்தார்.

இதேவேளை பலாலி விமான நிலையத்தின் பெயரை யாழ்பாண சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இது அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!