தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்பவருக்கே எமது ஆதரவு – சஜித் தரப்பிற்கு இரா.சம்பந்தன் பதில்.

யார் வேட்பாளர் என்பதில் எமக்கு பிரச்சினை கிடையாது தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு எந்தமாதியான தீர்வினை 2020 ஜனாதிபதி வழங்கப் போகின்றார் என்பதே எமக்குள்ள பிரச்சினை. தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்று. எமது நிபந்தனைகளுக்கு இணங்கி எம்முடன் பேசும் வேட்பாளருக்கு எமது ஆதரவினை வழங்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவினை பெற்றுக் கொள்வது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.

அமைச்சர்களான மங்களசமரவீர, மலிக் சமரவிக்கிரம, ராஜித சேனாரட்ண ஆகியோர் இரா.சம்பந்தன், மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவினை கோரினர்.

இதன்போதே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் யார் என்பது அல்ல எமது பிரச்சினை. தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு எந்த வடிவமான தீர்வினை வழங்கப் போகின்றார். என்பதுதான் எமது பிரச்சினை. ஆகவே தமிழ் மக்களின் கோரிக்கைளை ஏற்றுக் கொண்டு உண்மையான உறுதியினை வழங்கும் வேட்பாளருக்கு எமது ஆதரவினை தெரிவிப்போம். எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாளை மறுதினம் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட உள்ளனர். அதன் பின்னராக பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தமது தீர்மானங்கள் தொடர்பில் பேசவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!