டிக்கோயா தமிழ் மகாவித்தியாலயத்தில் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹட்டன் டிக்கோயா தமிழ் மகாவித்தியாலயத்தில் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது.


நிகழ்வில் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன், உலக சைவ திருச்சபையின் தலைவரும், கனடா பெரிய சிவன் ஆலயத்தின் தர்மகர்த்தாவுமான கலாநிதி அடியார் விபுலானந்தா, கனடா நாட்டின் பிரபல ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான சாமி அப்பாத்துரை, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலையின் அதிபர் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. பாடசாலையில் பிரதிஸ்டைய செய்யப்பட்ட சிவலிங்கம் உலக சைவ திருச்சபையினால் பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பாடசாலைக்கு செல்லும்பாதையும் கொங்கிரீட் இடப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதியை அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் வழங்கியிருந்தார். நிகழ்வில் இரண்டு இளம் இசைக்கலைஞர்கள் அமைச்சரினால் கௌரவிக்கப்பட்டனர்.

(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!