கண்டி திகன வழிப்பிள்ளையார் கோவிலுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

கண்டி திகன அழுத்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வழிப்பிள்ளையார் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா, கோவிலின் அறங்காவலர் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதன்போது, குண்டசாலை தேர்தல் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் ஆர்.டி சமரநாயக, முன்னாள் மத்திய மாகாண சபையின் தவிசாளர் துரை மதியுகராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திகன அழுத்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதான குருக்களின் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.
இதில் அடியார்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!