கண்டியில், இன நட்புறவை மேம்படுத்தும் நோக்குடன் பாதயாத்திரை

கண்டி பரகஹதெனிய லெவன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 41 வருட நிறைவை முன்னிட்டு, நாட்டின் இன நட்புறவை மேம்படுத்தும் நோக்குடன் சமாதானப் பாதயாத்திரை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை உடல் ஆரோக்கியத்துக்கு மிகச்சிறந்த ஆதாரமாக விளங்கினாலும், ஏனைய இனங்களுடன் நல்லுறவைப் பேணிப்பாதுகாக்க விளையாட்டு வீரர்கள் யாவரும் உறுதியுடன் செயற்படுவோம் என்ற தொனிப்பொருளில், விழிப்புணர்வூட்டும் வகையில், குறித்த பாதயாத்திரை நடாத்தப்பட்டது.

விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.எம்.சுஹ{த் தலைமையில் இப்பாதயாத்திரை நடைபெற்றது. கண்டி குருநாகல் பிரதான வீதியில் பரஹகதெனிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாதயாத்திரை, பரகஹதெனிய சந்தி, புசல்ல வீதி, கண்டி குருநாகல் பிரதான வீதி, 9 மைல் கல் என்ற இடத்தில் நிறைவுற்றது.

இதில் பழைய, புதிய இளம் விளையாட்டு வீரர்கள், பிரதேச மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!