கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு தாண்டவன்வெளி கூட்டுறவு நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், பிரஜா அபிலாசைகள் அமைப்பு, பால் அமைப்பு என்பனவற்றின் பிரதிநிதிகள், மீன அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். கிழக்கு மாகாணத்தில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் ஏற்பட்டுள்ள பல்வேறு வகையான காணிப்பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் பிரியங்கர கொஸ்ட்டா,பிரஜா அபிலாசை அமைப்பின் இணைப்பாளர் பிரான்சிஸ் ராஜன்,பால் அமைப்பின் இணைப்பாளர் நட்டாசா வேண், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பு.சசிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் இராணுவம் மற்றும் வனபரிபாலன திணைக்களத்தினால் அபரிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பிலும் சுற்றுலா என்னும் போர்வையில் மீனவர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது தமது காணிகளை மீட்பதற்கான உறுதிமொழிகளை வழங்குபவருக்கு தமது ஆதரவு வழங்குவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

அரசியலுக்கு அனைவரின் ஆதரவுகளையும் பெற்றுவரும் அரசியல்வாதிகள் காலப்போக்கில் மக்கள் மத்தியில் பிளவுகளையும் இனவாத,மதவாத சிந்தனையினையும் விதைக்கமுற்படுவதாகவும் இதன்போது தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் பிரியங்கர கொஸ்ட்டா தெரிவித்தார்.
(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!