அமைச்சர் பாலித தேவரபெருமவை விடுதலை செய்யக் கோரி போராட்டம்.

களுத்துறையில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதி அமைச்சர் பாலித தேவரபெரும உட்பட ஐந்து பேரை விடுதலை செய்யக் கோரி ஹட்டன் என்பீல்ட், நோனாதோட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

மலையக தன்னெழுச்சி இளைஞர்களின் ஏற்பாட்டில் ஸ்ரீ செல்வவிநாயக ஆலயத்திற்கு முன்பாக காலை 11 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

‘உண்மையாக சேவை செய்யும் தலைவர்களை இனங்காண்போம்”, ‘ஏமாற்று தலைவர்களை வெளியேற்றுவோம்”, “பாலித்த விடுதலைக்கு இறை ஆசி வேண்டி பூஜை செய்வோம்” போன்ற பதாதைகளை ஆர்ப்பாட்டகாரர்கள் ஏந்தியிருந்தனர்.
இந்த ஆர்பாட்டத்தின் போது 75ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு செல்வ விநாயகர் ஆலயத்தில் சிதறு தேங்காய்கள் உடைத்து விசேட பூஜைகளில் ஈடுபட்டனர். ஷ
(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!