யாழ்ப்பாணத்தில் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினை வேந்தல் யாழ்ப்பாணத்திலும் அனுஸ்டிக்கப்பட்டது.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீர் கூட அருந்தாது 12 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கட்சி பேதங்களைக் கடந்து இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில், தியாகி திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்ட நேரமான காலை 9.45 மணிக்கு பொதுச் சுடரேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

பொதுச் சடரினினை உயிரிழந்த போராளி தேவானந்தனின் தாயார் ஏற்றிவைக்க, தியாகி திலீபனின் உருவப் படத்துக்கான தியாகச் சுடரை மாவீரர் சஞ்சீவனின் சகோதரன் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து திரண்டிருந்த மக்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளின்றி மிகவும் உணர்வு பூர்வமாக மலரஞ்சலி செலுத்தி, மலர் மாலை அணிவித்து அஞ்சலி செய்தனர்.

யாழ். மாநகர முதல்வர், தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மண்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாகவும் உணர்வு பூர்வமாகவும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!