களுத்துறையில் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்காவின் நடமாடும் சேவை!

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் 5 வது நடமாடும் சேவை களுத்துறை மாவட்ட பொது விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இந்த நடமாடும் சேவைக்காக நிதி அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்கள் மற்றும் அரச வங்கிகள் தமது சேவைகளை வழங்குகின்றன.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம் தொடர்பான தெளிவை பெறவும், சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் பெருந் திரளான மக்கள் வருகை தருகின்றனர்.

வேலைத் திட்டம் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜயமான்னவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் 5 ஆவது நடமாடும் சேவை இன்றும் நடைபெறுகின்றது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!