சவுதி மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்!

சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஆளில்லா விமானத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சவுதி அரசின் ‘அரம்கோ’ எண்ணெய் உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தமான ‘புக்யாக்’ எனும் இடத்தில் அமைந்துள்ள ‘அப்கைக்’ என்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் அந்த தொழிற்சாலையின் பெரும்பகுதி சேதமடைந்தது.

இதேபோல், ‘குர்அய்ஸ்’ என்ற பகுதியில் உள்ள ‘அரம்கோ’ நிறுவனத்தின் எண்ணெய் கிணறு மீதும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் எண்ணெய் கிணற்றின் ஒருபகுதி தீப்பிடித்து எரிந்த போதும், பின்னர் தீ அணைக்கப்பட்டதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஆளில்லா விமானத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேபோல், சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்று குவைத் உள்ளிட்ட உலக நாடுகள் பல கண்டனங்களை தெரிவித்துள்ளன.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!