முல்லைத்தீவு பரந்தன் வீதியில் விபத்து!

முல்லைத்தீவு பரந்தன் வீதியில் வள்ளிபுனம் காளிகோவிலடிப்பகுதியில் முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்று மோதியதில் இரண்டு வாகனங்கள் சேமடைந்துள்ளன.

பரந்தன் பகுதியில் இருந்து வேகமாக பயணித்த டிப்பர் வாகனம் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது வீதியை விட்டு விலகி முல்லைத்தீவில் இருந்து பரந்தன் நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் கூலர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது வீதிபோக்குவரத்து சமிக்ஞைகளையும் சேதமடைந்துள்ளன.

விபத்தின்போது முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை தொடர்ந்து விபத்து இடம்பெற்ற இடத்திற்கு வந்த புதுக்குடியிருப்பு பிரிவு வீதிபோக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!