முல்லைத்தீவில் மாணவர்களுக்கு உதவி வழங்கல்!

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்கு 75,000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் மற்றும் சீருடைத்துணிகள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் திருமுறிகண்டி இந்து வித்தியாலயம் மற்றும் பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர்களால் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்தே மாணவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டதாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமது பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களில் பலர், கடந்த கால யுத்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்து, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளதாக குறித்த பாடசாலை அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து இரு பாடசாலைகளைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு நேற்றைய தினம் உதவிகள் வழங்கப்பட்டன.

இதேவேளை மாங்குளம் ஒலுமடு தவம் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை தந்துதவுமாறு வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ரூபா 25,000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் 20 முன்பள்ளி மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கான நிதி அனுசரனையை லண்டன் மற்றும் சுவிஸ் நாட்டை சேர்ந்த புலம்பெயர் உறவுகள் தமது பிள்ளைகளின் பிறந்த நாளினை முன்னிட்டு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!