தமிழர் விடுதலைக் கூட்டணி எழுக தமிழுக்கு ஆதரவு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு தமிழர் விடுதலைக்கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு தமிழர் விடுதலைக்கூட்டணி ஆதரவளிப்பதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் எழுக தமிழ் ஆதரவு தொடர்பில், வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களின் பெருந்தலைவர்களான தந்தை செல்வா, பெரியார் ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆகியோர் – தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும்.

அந்த முயற்சியில் பெரும் வெற்றியும் கண்டது.

துரதிஸ்ட வசமாக அந்த ஒற்றுமை தற்போது சீர்குலைந்திருந்தாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அடிப்படைக் கொள்கைகளில் எதுவித மாற்றமும் இன்றி செயற்படுகிறது.

இன்று நாட்டு நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்து வருகிற இந்நிலையிலேயே தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வை தூண்டுவதற்கு சில கோரிக்கைகளை முன்வைத்து எழுக தமிழ் நிகழ்வு நடத்தப்படுகிறது!

இதற்கு தமிழ் மக்கள் அனைவரும் பூரண ஆதரவை வழங்கி அதில் கலந்துகொள்ளுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி வேண்டுகிறது!

இவ்வொற்றுமையின் அவசியத்தை நேற்று நடைபெற்ற சம்பவமும் எமக்கு உணர வைக்கிறது. கொக்கட்டிச்சோலைக்கு பாதயாத்திரை மேற்கொண்டவர்களை பொலிசார் கன்னியா வெந்நீர் ஊற்றில் நீராடவிடாத செயல் அரசினுடைய அனுசரணையுடனேயே நடந்திருக்கிறது என நான் சந்தேகப்படுகிறேன்.

எழுக தமிழ் மூலம் தமிழரின் ஒற்றுமை ஓங்கி வளரட்டும் என வாழ்த்துகின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.(நி)

 

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!