அநுராதபுரம் சிறைச்சாலையில் புதிய பிள்ளையார் ஆலயம்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளுக்கு பிரத்தியேகமாக அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்ட புதிய பிள்ளையார் கோவிலின் திறப்பு விழா சிறைச்சாலை அத்தியட்சகர் ரோஹன கலப்பதி தலைiயில் நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிவன் அறக்கட்டளை இயக்குனர் கணேஸ்வரன் வேலாயுதம் மற்றும் பிரதான சிறைக்காவலர் சமன்த தசாநாயக கலந்து சிறப்பித்தனர்.

பருத்தித்துறை ஆலடியப் பிள்ளையார் கோவில் சசிகுமார் குருக்கள் மற்றும் யாக்கரைப் பிள்ளையார் உதய சங்கர் குருக்கள் இணைந்து வழிபாடுகளை நடாத்தினர்.

இந்நிகழ்வில் சிறைச்சாலையின் சமூக நலன்புரி அமைப்பின் அதிகாரிகள், கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சதீஸ், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் நாகலிங்கம் தர்சன், பருத்தித்துறை மின்சாரத் துறை அத்தியட்சர் பொறியியலாளர் கமலகோபன், சாவகச்சேரி பொது சுகாதாரப் பரிசோதகர் கமல் குமார் ஆகியோருடன் தமிழ்-சிங்கள கைதிகளும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!