டெஸ்ட் போட்டியிலும் சாதிக்க வேண்டும் என்கின்றார் பும்ரா!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சாதிக்க வேண்டும் என்பது தனது நீண்டநாள் விருப்பம் என இந்திய அணியின் பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயற்பட விரும்பியதாக இந்திய அணியின் வீரர் பும்ரா தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹட்ரிக் சாதனை படைத்த பும்ரா, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் முக்கியமான ஒன்று. டெஸ்ட் போட்டியில் விளையாடி முத்திரை பதிக்க வேண்டும் என நான் எப்போதும் விரும்புவதுண்டு.

20 ஓவர், ஒருநாள் போட்டி ஆகியவற்றில் மாத்திரம் விளையாடவேண்டும் என்று விரும்பியதில்லை.

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ளேன்.

அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

டெஸ்ட் பயணத்தை இப்போதுதான் தொடங்கி இருக்கிறேன். அதாவது வெறும் 12 டெஸ்டுகளில் தான் விளையாடி இருக்கிறேன்.

முதல்முறையாக தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கால்பதித்த அன்றைய தினம், எனது கனவு நனவான மறக்க முடியாத தருணமாகும்.

அடுத்து இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளேன்.

இந்தியாவில் டெஸ்டில் விளையாடுவது வித்தியாசமான சவாலாக இருக்கும்.

அதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.’ என பும்ரா குறிப்பிட்டார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!