சு.கவின் மாவட்ட ரீதியிலான முதலாவது மாநாடு நாளை இரத்தினபுரியில்!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட ரீதியிலான முதலாவது மாநாடு நாளை இரத்தினபுரியில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாவட்ட ரீதியில் மாநாடுகளை நடாத்த திட்டமிட்டுள்ளது.

இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலாவது மாநாடு இரத்தினபுரி மாவட்டத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நாளை நடைபெறவுள்ள மாநாடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதில் கட்சி முக்கியஸ்தர்கள், பிரதேச, உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மாத்தளை மாவட்டத்தில் இம்மாதம் 21 ஆம் திகதியும், 22 ஆம் திகதி மாத்தறை மாவட்டத்திலும், 29 ஆம் திகதி குருணாகல் மாவட்டத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட ரீதியிலான மாநாடு இடம்பெறவுள்ளன.

இதனைத் தொடர்ந்து ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி காலை 9 மணிக்கு காலியிலும், அதனைத் தொடர்ந்து எல்பிட்டியவிலும் இடம்பெறவுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!