ஜனநாயகத்தால் எதனையும் வெற்றிகொள்ள முடியும் என்பதை நிரூபித்துள்ளோம்:ரணில்

ஜனநாயகத்தால் எதனையும் வெற்றிகொள்ள முடியும் என்பதை கடந்த நான்கரை வருடங்களில் நிரூபித்து காட்டியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாவிட்டாலும் ஜனநாயகத்தால் எதனையும் வெற்றிகொள்ள முடியும் என்பதை கடந்த நான்கரை வருடங்களில் நிரூபித்து காட்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் 3300 குடும்பங்களுக்கு வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் 3300 குடும்பங்களுக்கு வீடுகளை கையளிக்கும் நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக விளையாடரங்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், பாராளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், பல்வேறு பணிகளை முன்னெடுக்க கூடியதாக இருந்தால் பெரும்பான்மை கிடைத்தால் இதனைவிட பல வேலைத்திட்டங்களை தம்மால் முன்னெடுக்க முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை வான் கலாசாரத்தினூடாக ஜனநாயக இலக்குகளை அடைய முடியாது என்று சுட்டிக்காட்டிய பிரதமர், அனைவருடனும் ஒற்றுமையாக செயற்படுவதினூடாகவே இலக்குகளை அடைய முடியும் என்று கூறினார்.

நாட்டில் கட்டட நிர்மாணங்களை மேற்கொண்டது போன்று மறுபுறம் ஜனநாயகத்தையும் படிப்படியாக கட்டியெழுப்பியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தால் தற்போதைய அரசாங்கத்துக்கு அதிகளவான கடன் சுமையையே கொடுக்க முடிந்ததாகவும், சுமைகளின் மத்தியில் ஆட்சியை பொறுப்பேற்று கொண்டிருந்தாலும் சவால்களை பொருட்படுத்தாது சிறந்த வெற்றி இலக்குகளை அடைய முடிந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!