மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல் மாகாண ஆளுநராக கொழும்பு மாநகரின் முன்னாள் முதல்வரான ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இறுதியாக ஏ.ஜே.எம்.முஸம்மில் மலேசியாவிற்கான தூதுவராகப் பணியாற்றியிருந்த நிலையில், தற்போது மேல்மாகாண ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல் மாகாணத்தின் ஆளுநராக இருந்த அஸாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர் ரத்னதேரரின் உண்ணாவிரப் போராட்டத்தின் பின்னர் பதவி விலகியதையடுத்து, மேல்மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.