சமயக் கல்வியை கற்பிக்கும் கட்டடங்களின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்!

சமயக் கல்வியை கற்பிக்கும் அனைத்து கட்டடங்களினதும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாட்டில் சமயக் கல்வியை கற்பிக்கும் அனைத்து கட்டடங்களினதும் குறைபாடுகள் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டாகும் பொழுது நிவர்த்தி செய்யப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இரத்மலானயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு குறிப்பிட்டார்.

எழுந்து நிற்கும் ஒருவருக்கு அடிக்க முடியுமான பெரிய அடியை அடிப்பது அரசியல் சமூகத்தின் பண்பாக மாறியுள்ளதாக அமைச்சர் கூறினார்.

அத்துடன் அரசியல் கட்சிகளில் திறைமையானவர்களுக்கு சரியான இடம் வழங்கப்படுகின்றதா என்பதில் விமர்சனம் காணப்படுவதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.(நி)

 

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!