சப்ரகமுவ சமன் தேவாலய எசல பெரஹரா தேசிய விழாவாக பிரகடனம்!

வரலாற்று முக்கியத்துவமிக்க சப்ரகமுவ சமன் தேவாலயத்தின் எசல பெரஹராவை தேசிய விழாவாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சப்ரகமுவ சமன் தேவாலயத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

வரலாற்று முக்கியத்துவமிக்க சப்ரகமுவ சமன் தேவாலயத்தின் எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா சப்ரகமுவவின் தனித்துவங்களை எடுத்துக்காட்டும் வகையில் நேற்றைய தினம் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் அங்கு சென்ற ஜனாதிபதி, முதலில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டதன் பின்னர் சங்கைக்குரிய பென்கமுவே தம்மதின்ன நாயக்க தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து வரலாற்று முக்கியத்துவமிக்க சப்ரகமுவ சமன் தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹராவை தேசிய விழாவாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

சப்ரகமுவ புகழ்பெற்ற சமன் தேவாலயத்தின் எசல பெரஹராவுக்கு நீண்டகாலமாக பேணப்பட்டுவரும் பல்வேறு பாரம்பரியங்கள் உள்ளன.

அந்த கலாசார பெறுமானங்களை பாதுகாக்கும் வகையில் தேசிய விழாவாக இந்த பெரஹராவை வெற்றிகரமாக முன்னெடுக்கும் வகையில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் அது தேசிய விழாவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் சப்ரகமுவ சமன் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே மிகார ஜயசுந்தரவினால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்று வழங்கிவைக்கப்பட்டது.

பெல்மதுல்ல ரஜமகா விகாரையின் விகாராதிபதியும் சப்ரகமுவ மாகாணத்தின் தலைமை சங்கநாயக்க தேரரும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சங்கைக்குரிய பென்கமுவே தம்மதின்ன நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும், சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இரத்தினபுரி தொகுதி அமைப்பாளர் பிரியந்த கருணாதிலக்க, நிவித்திகல தொகுதி அமைப்பாளர் மியுறு பாஷித லியனகே, கலவான தொகுதி அமைப்பாளர் சலித கருணாரத்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!