ஜனாதிபதியின் பங்குபற்றலுடன் ‘சதஹம் யாத்ரா’ சமய உரை!


மாத்தறை, அக்குரஸ்ஸ, கொடபிட்டிய ஜேத்தவன ரஜமகா விகாரையில் ‘சதஹம் யாத்ரா’ சமய உரை தொடரின் 54ஆவது நிகழ்வு நேற்று நடைபெற்றது.

பௌர்ணமி தினங்களில் இலங்கையின் பிரதான விகாரை ஒன்றை மையமாகக்கொண்டு இடம்பெறும் ‘சதஹம் யாத்ரா’ சமய உரை தொடரின் 54ஆவது நிகழ்வு மாத்தறை, அக்குரஸ்ஸ, கொடபிட்டிய ஜேத்தவன ரஜமகா விகாரையில் நேற்றைய தினம் நடைபெற்றது.

மாத்தறை, அக்குரஸ்ஸ, கொடபிட்டிய ஜேத்தவன ரஜமகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, விகாரதிபதி சங்கைக்குரிய அகலகட ரத்தனபால தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டதை அடுத்து ஜனாதிபதியின் பங்குபற்றலுடன் ‘சதஹம் யாத்ரா’ சமய உரை தொடர் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, சங்கைக்குரிய கம்பஹா மகாநாம தேரர் சமய உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும், பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!