கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட ஆறு பேருக்கு விளக்கமறியல்!

போதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்ட ஆறு பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரானிற்கு வழங்குவதற்காக இரண்டு கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் இரண்டு மின்னேற்றிகளையும் எடுத்துச் சென்ற அவரின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட ஆறு பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது அவர்கள் கொண்டுசென்ற உணவு பொதியில் இரகசியமாக குறித்த பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்ட ஆறு பேரும் காலி நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எதிர்வரும் 25ஆம் திகதி வரை இவர்களுக்கான விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!