தமிழ்த்தின போட்டியில் கிளிநொச்சி மாணவர்கள் சாதனை!

அகில இலங்கை ரீதியான தமிழ் மொழித்தினப் போட்டியில், குழு நடனம் அதாவது வாள் நடனம் பிரிவில், கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவர்கள், தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்று, சாதனை படைத்துள்ளனர்.


இந்த நிலையில், சாதனை படைத்த மாணவர்களுக்கு, ஏற்பாட்டாளர்கள், பாடசாலை சமூகத்தினர் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற இந்தப் போட்டியில், மாணவர்கள் முழுமையாக திறமையை வெளிப்படுத்தி, சாதனையை நிகழ்த்தியுள்ளதாக, பொறுப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கு, பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!