13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்த நாம் தயாராகவே இருந்தோம் – ஹெகலிய ரம்புக்வெல்ல

இலங்கைத் திருநாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இனங்களுக்கு தலைமை தாங்குவதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை மாறாக ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு இது பௌத்தர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு என்பதை ஏற்றுக் கொள்ளும் தலைமைகள் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் வாழும் மாகாணங்களில் காணப்படும் வீதிகளை புனரமைத்து தாருங்கள், வாய்கால்களை புனரமைத்து தாருங்கள், வாழ்வாதாரங்களை ஏற்படுத்துங்கள் என கோரிக்கை விடும் சந்தர்ப்பங்களில் எல்லாம் நாம் உடனடியாகவே அதனை நிறைவேற்றிக் கொடுத்திருக்கின்றோம். அதனை விடுத்து தமிழ் ஈழத்தை தாருங்கள் தனி நாடு தாருங்கள் என்று கேட்பதற்கு நாம் செவி சாய்ப்பது கிடையாது.

13வது திருத்தச் சட்டத்தில் காணப்படும் அனைத்து அதிகாரங்களையும் வழங்கி அதனை முழுமையாக்குவதற்கு நாம் தயாராக இருந்திருக்கின்றோம். கடந்த 2015ம் ஆண்டு இரா.சம்பந்தனுடன் அது தொடர்பில் பேச்சுக்களை நடாத்தியிருந்தோம். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடலுக்கு திகதியும் குறித்திருந்தோம். ஆயினும் டயஸ்போரா அமைப்புக்களின் கதைகளை கேட்டுக்கொண்டு யுன்என்பி கட்சி 13க்கும் மேலே தரும் என்று அங்கு போய் சேர்ந்தார்கள். அதனால் பல விடயங்கள் தடைப்பட்டு போனது.

13வது திருத்தச் சட்டம் ஒன்று நாம் புதிதாக ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கவில்லை அது எமது அரசியல் சாசனத்தில் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டு தற்போதும் இருப்பது எனவே அதனை வழங்குவதில் எமக்கு பெரிய சிக்கல் இருக்கவில்லை. சில கலந்துரையாடல்களை நடாத்தி புரிந்து கொண்டு அதனை வழங்குவதற்கு எத்தணித்திருந்தோம்.

தற்போதும் அது தொடர்பில் பேசி தீர்வினை எட்டிக்கொள்ள முடியும். டக்கிளஸ் தேவானந்தாவுடன் இணைந்து போவதில் எமக்கு பிரச்சினை இல்லை. நாட்டினை பிரிவு படுத்துவது தொடர்பில் அவர் பேசுவது கிடையாது. மக்கள் வாழ்வதற்கான நிலமையை ஏற்படுத்துவது தொடர்பில் அவர் பேசுகின்றார். பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பெற்று மாகாணசபையினை முழுமையான அதிகாரமுள்ளதாக ஆக்குவதற்கு புரிந்து கொண்ட தமிழ் தலைவர்கள் இங்கே இருக்கின்றார்கள். தமது கொள்கையில் பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டு செயற்படுபவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!