மட்டக்களப்பில், சமகால அரசியல் நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டது.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம், மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

பேராசிரியர் கண்ணமுத்து சிதம்பரநாதனின் ஏற்பாட்டில், நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழர் மகா சபையின் தலைவர் விக்னேஸ்வரன், கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் தலைவர் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் உட்பட, நாட்டின் தற்போதய அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்த கூட்டத்தில், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தார்.

பணப்பெட்டி அரசியல்வாதிகளுக்கும், சவப்பெட்டி அரசியல்வாதிகளுக்கும், பிரச்சினையை தீர்க்கும் நோக்கமோ விருப்பமோ இல்லை என, பாராளுமன்ற உறுப்பினரும் டக்ளஸ் தேவானந்தா இங்கு தெரிவித்தார்

(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!