புலிகளிடம் நன்றாக அனுபவித்தவர்கள் புலிகள் இல்லை என ஆனபின் வேறு கட்சிகளுடன் –  சிறிதரன் எம்.பி ஆதங்கம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பின்னால் நிற்கும் சிவராசா கருணாகரன் போன்றவர்கள் விடுதலைப் புலிகளோடு இருந்து நல்லாக அனுபவித்தார்கள். புலிகள்தான் இவர்களுக்கு காணி முதற்கொண்டு அனைத்தையும் கொடுத்தார்கள். இன்று புலிகள் இல்லை என்று ஆனபின் வேறு கட்சிகளுடன் இணைந்து கொண்டுள்ளார்கள். இனிவரும் காலங்களில் எங்கு சேருவார்களோ என்று தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உப அலுவலக கட்டட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த புதிய கட்டடம் அமைப்பதற்கான காணியினை நன்கொடையாக வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. இந்த கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சுயேட்சைக்குழுவுடன் தொடர்புடய கருணாகரன் அத்திவார கல் இடும் நிகழ்வினை தடுப்பதற்கு முயற்சித்தார். மிக மோசமான இவர்களைப் போன்ற மனிதர்கள் அபிவிருத்தி நடைபெறுவதனை தடுக்கின்றார்கள்.

நாம் பல சவால்களுக்கு மத்தியில்த்தான் இந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
மகிந்த கோட்டாவுக்கு கீழ் அடாவடி அரசியல் செய்தவர்கள் இன்றும் அந்த அடாவடி அரசியலை செய்ய
ஏங்குகின்றார்கள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கும் முன்னாள் அமைச்சருக்கும் இப்போதுள்ள அரசாங்க அதிபர்கள் பயப்பிடுகின்றார்கள். பாரிய சவால்களுக்கு மத்தியில் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில் காணி அன்பளிப்பு செய்தவரின் பெயர் பொறிக்கப்பட வேண்டும்.

என்று அவர் இங்கு தெரிவித்தார்.
(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!