பாட்டியை தடியால் அடித்துக் கொன்றனர் – பேரன் பரபரப்பு வாக்குமூலம் (காணொளி இணைப்பு)

எனது அப்பா, அம்மா, அண்ணா மூவரும் பாட்டியை பொல்லால் அடித்து கொலை செய்ததன் பின்னர் உரபாய்க்கில் போட்டு கட்டி ஆட்டோவில் ஏற்றிச் சென்றதாக பிரதான சந்தேக நபரின் இளைய மகன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வளங்கியுள்ளான். கொலை செய்யப்பட்ட பாட்டியின் இரண்டாவது பேரனான எட்டு வயதுடய கோபால் பாலகிருஸ்ணன் வழங்கிய தகவலின் அடிப்படையில் வட்டவளைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன். மோப்ப நாய்களின் உதவியுடன் தடயங்களை சேகரிப்பதற்கான பணிகளையும் முன்னெடுத்துள்ளனர்.

நுவரெலியா வட்டவளை பிட்டவின் விக்டன் தோட்டப் பகுதியில் மகன், மருமகள், மற்றும் பேரப்பிள்ளையினால் பாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பாட்டியின் உடலினை உரபாய்க் ஒன்றில் கட்டி முச்சக்கரவண்டியில் எடுத்துச் சென்று வீசியுள்ளனர்.

வாக்குமூலம் வழங்கிய சிறுவனின் தாய், தந்தை, அண்ணன் ஆகியோர் தற்போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அவர்களிடம் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!