ஐ.நா தீர்மானத்தினை மீறியும் போர் குற்றவாளிகள் உயர் பதவியில் – மாவை எம்.பி கவலை தெரிவிப்பு

போர் குற்றவாளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஐநா. மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் போர் குற்றம் புரிந்தவர்கள் உயர் பதவியில் அமர்த்தப்படுகின்றார்கள். எமது மக்களின் வாக்குகளினால் அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன கொடுத்த வாக்குறுதி எல்லாவற்றினையும் மறந்து செயற்படுகின்றார். ஆகவே எதிர்வரும் தேர்தலில் நாம் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உப அலுவலக கட்டட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின், இயக்கச்சி முள்ளிப்பற்று உப அலுவலக புதிய கட்;டடத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா திறந்து வைத்தார். அத்துடன், உப அலுவலகத்துடன் இணைந்த நூலகம், ஆயுர் வேத வைத்தியசாலை என்பன, 4 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் அவைகளும் இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் பூநகரி, கரைச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்;கள், உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!