முல்லைத்தீவு செம்மலை மாணிக்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம் இன்று

முல்லைத்தீவு செம்மலை மாணிக்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம் இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
செம்மலை மாணிக்க பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆலய பிரதம குருக்கள் திருஞ்ஞானசம்மந்தக் குருக்கள் தலைமையில் 30அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து திருவிழா நடபெற்று 14ஆம் நாளான நேற்று தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

தேர்திருவிழாவை காண ஆலயத்திற்கு பல்வேறிடங்களிலும் இருந்து பக்தர்கள் வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
15 ஆம் நாளான இன்றைய தினம் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

நாளைய பூங்காவனத்திருவிழா இடம்பெற்று வருடாந்த திருவிழா நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!