ஐ.தே.க ஜனாதிபதி வேட்ப்பாளரை தெரிவு செய்ய விசேட குழு

இழுபறி நிலையில் காணப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்கு விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான நவீன் திஸாநாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை கட்சியின் தலைவர் மற்றும் பிரதி தலைவர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்வாறு குழுவொன்றை நியமிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த குழுவில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சார்பில் இருவரும், பிரதி தலைவர் சஜித் பிரேமதாச சார்பில் இருவரும் உள்ளடங்குகின்றனர். அதற்கினங்க பிரதமர் சார்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவும், அவரது ஆலோசகர் தினேஷ் வீரகொடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று சஜித் சார்பில் அமைச்சர்களான ரஞ்சித் மத்தும பண்டா மற்றும் கபீர் ஹசிம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!