கொங்கோ ரயில் விபத்தில் 50 பேர் உயிரிழப்பு!

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

மாயிபாரிடி பகுதி வழியாக சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மீட்பு விவகாரத் துறை அமைச்சர் ருவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கொங்கோ ஜனநாயகக் குடியரசு, ரயில்வே துறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மிக மோசமான முறையில் மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுகிறது.

கடந்த மார்ச் மாதம், கேசாய் என்னுமிடத்தில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயரிழந்தமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!