வவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி!

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது.

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட முதியோர் சங்க உறுப்பினர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றன.

மாவட்ட சமூக சேவை அலுவலகர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியில் கிடுகு பின்னுதல், வேகநடை, சங்கீதக் கதிரை, கூடைக்குள் பந்துபோடுதல் என பல்வேறு விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

இப்போட்டிகளை விளையாட்டு உத்தியோகத்தர் பிந்துசன் வழிநடாத்தியதுடன் பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் வசந்தரூபன் ஒழுங்கமைத்திருந்தார்.

போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட மட்ட போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்முறை மாகாண மட்ட முதியோர் தின விழா வவுனியாவில் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!